கைராசியின் மருமம் – Shalom Times Shalom Times |
Welcome to Shalom Times

கைராசியின் மருமம்

அந்நாட்களில் எங்கள் வீட்டில் அப்பத்திற்கான மாவைப் பிசைந்து வைத்தால் அது புளிப்பதில்லை. புளியாத மாவினால் சுடப்படும் அப்பம் உப்புசப்பற்று இருக்கும். அங்ஙனமிருக்க ஒருநாள் பங்கு சாமியார் வீடு மந்திரிக்க வருவதாகக் கூறினார். அவருக்குக் காலை உணவு கொடுக்க வேண்டும். அப்பமும் கோழிக்கறியும் கொடுப்பது சிறந்தது!

அப்பம் சுடத் தீர்மானித்தோம். மாவைப் பிசைந்து வைத்தேன். கூடவே இன்னொன்றும் செய்தோம். ஒரு சிறு ஜெபத்தையும் மாவுடன் சேர்த்து வைத்தோம்: “மாதாவே, உமது மகன் நாளை வருவார். அப்பம் சுவைபட இந்த மாவை நன்றாகப் புளிக்கச் செய்வியும்”. அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். மறுநாள் சுட்ட அப்பத்தைப் போல் சுவையான அப்பம் எப்போதும் சுட்டதும் இல்லை; தின்றதும் இல்லை. அதைச் சாப்பிட்ட பங்கு சாமியார் அப்பம் சுட்டவரைப் புகழ்ந்து தள்ளினார். அவரது கைராசியை மெச்சினார். ஆனால் இதன் மருமம் கைராசியாக இருக்கவில்லை…!