சிவப்புத் தொப்பி – Shalom Times Shalom Times |
Welcome to Shalom Times

சிவப்புத் தொப்பி

பொதுநிலையினரே சபையின் வலிமை என உணர்ந்த கர்தினாள் யொவானி முந்தீனி, திருச்சபையின் செயல்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்க விரும்பினார். ஒரு முறை அவர் கனிமச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பார்க்கச் சென்றபோது அங்கே பிரபலமான ஒரு கம்யூனிஸ்ட் தோழரைக் கண்டார். அவருடைய தலையில் இருந்த தலைக்கவசத்தைக் கழற்றிய கர்தினாள் தமது சிவப்புத் தொப்பியை எடுத்து அவருடைய தலையிலே அணிவித்தார். இதைப் பார்த்த மற்றவர்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

பின்னர் கர்தினாள் அவரிடம், “மகனே, லெனிலோ காரல் மார்க்சோ கூறும் கூற்றுகளைக் காட்டிலும் ஏன் இந்தத் தலைக்கவசம் தரும் பாதுகாப்பைக் காட்டிலும் துன்பங்களில் ஆண்டவரே உனக்குத் துணையாக வருவார். இந்தச் சிவந்த தொப்பிக்குச் சொந்தக்காரராக இருந்தவர்தான் அருளாளர் ஆறாம் பவுலாகிய பாப்பரசர்.